இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது, புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க 391 கூட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7, 693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 39, 359கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து ரூ. 6. 22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபடக் கூடாது என்று அவர் கூறினார்.