தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 717 மதுக்கடைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று வரை 513 மதுக்கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இன்னும் 204 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.