இதையறிந்த அந்த பெண், லாரன்சை பிரிந்து, தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி இரவு, மதுபோதையில் அப்பெண் வீட்டிற்கு சென்ற லாரன்ஸ், அவரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் தோள்பட்டை மற்றும் கையில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார்.
பலத்த காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், தலைமறைவாக இருந்த லாரன்சை, நேற்று முன்தினம் (செப்.,28) கைது செய்து சிறையில் அடைத்தனர்.