சென்னை புறநகர் மக்களின் நீண்ட நாள் கனவான வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டத்தின் இறுதி கட்ட சோதனை ஓட்டம் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ரயில் சேவை வரும் 10ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வருவது சென்னை புறநகர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.