பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில், சட்ட விரோதமாக பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட இடிபாடு கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றப்படாமை போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சென்னை மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட இடிபாடு கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டினை மேம்படுத்தவும், கடந்த ஐந்து வருடங்களாக அமலில் உள்ள அபராத தொகையானது திருத்தியமைக்கப்படுகின்றன.

எனவே, இனி வரக்கூடிய நாட்களில் உயர்த்தப்பட்ட அபராத தொகையை செயல்படுத்துவதன் மூலம் சட்ட விரோதமாக பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட இடிபாட்டு கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றப்படாமை போன்ற விதிமீறல்கள் வெகுவாக குறைக்கப்படுவதுடன் சென்னை மாநகரம் தூய்மையாக பராமரிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி