கூட்ட நெரிசலைப்போக்க, சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று (09. 08. 2024) இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், பண்ருட்டி, சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக நாளை காலை 6. 40 மணிக்கு திருச்சி சென்றடையும். மீண்டும், 11ஆம் தேதி இரவு 10. 30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5. 50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.