சென்னையில், கொடுங்கையூரைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் தனது வீட்டில் நகை திருடு போனதாக உறவுக்காரப் பெண் மீது சந்தேகம் தெரிவித்து போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணைக்குச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர், அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.