இருப்பினும், அவ்வப்போது எழும் புகாரையும் முற்றிலும் தவிர்க்கும் வகையில் மது குடித்துவிட்டு பணிக்கு வருவோருக்கு கடும் தண்டனைகள் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதன்படி, மதுபோதை குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டால், அரசின் அனுமதிக்குப் பிறகே மீண்டும் பணியில் சேர முடியும். மண்டல அளவில் பணியிடமாற்றம், ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படக்கூடும். இதுதொடர்பான ஆலோசனைகளுக்குப் பிறகு அரசு மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கிடையே, மனஅழுத்தம் உள்ளிட்டவற்றால் மதுபோதைக்கு ஆளான ஊழியர்களுக்கான மனநல ஆலோசனையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பெரம்பூர்
பெண் காவலரை கத்தியால் குத்திய கணவர் கைது