சோழிங்கநல்லூர்: கழிவறையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அருகில் அரசுக்கு சொந்தமான நடமாடும் கழிவறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பிறந்து சில மணி நேரம் ஆன பச்சிளம் குழந்தையை பார்த்து தூய்மை பணியாளர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி