சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-இல் சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகள், தற்போதைய மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை வளாகத்திற்குள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சமாக, இந்த நிலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் நோக்கில், மெட்ரோ இரயில் நிலைய நுழைவு/வெளியேறும் இடம், பேருந்து நிறுத்தம் மற்றும் புறப்படும் இடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சொத்து வளர்ச்சி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ கட்டமைப்பும் பேருந்து நிலையமும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதிகளுடன் கூடிய இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 29,385 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு கட்டிடங்கள் அமையவுள்ளன. இரண்டு கட்டிடங்களின் மாடியிலும் சூரிய மின்கல அமைப்புகள் (solar panels) அமைக்கப்படும்.