சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் தண்டவாள தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை முதல் மே 31 வரை 5 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரக்கோணம் பணிமனையில் மே 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், மே 17 முதல் 31 வரை அதிகாலை 4.00, 5.00 மற்றும் 6.25 மணிக்கு அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்குச் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.