சென்னையில் சூறைக்காற்று: விமான சேவை பாதிப்பு

சென்னையில் வீசிய சூறைக்காற்றால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் திடீரென வானிலை மாறியதால், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் திருப்பிவிடப்பட்டு, தற்போது திருப்பதி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. மெரினா கடற்கரையில் காலை முதலே புழுதி காற்று வீசி வருகிறது. மேலும், சென்னையின் பல பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி