விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதிசெய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து: அரசின் நிலைப்பாடு என்ன? CPM கேள்வி