சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள L வடிவ மேம்பாலத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 652 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தால் கிண்டி - ராஜீவ் காந்தி சாலை செல்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், எ. வ. வேலு, திமுக எம். பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.