சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், பதவி ஆசைக்காக தவெக அரசுடன் இணையவில்லை. இயக்கத் தோழர்களின் ஒப்புதலுடன் தவெக அரசுடன் இணைந்து செயல்பட்டுவதாகவும், அமைச்சரவையிலும் அதே முடிவின் அடிப்படையில் தான் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். யாரோடு இணைந்து களம் கண்டாலும் கூட்டணி தொடர்பான முடிவு தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும். திமுக கூட்டணியில், தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.