தமிழகத்தில் ஜன., 31ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 61,840 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 7,730 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிப்., 01ம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ. 15 உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு கிராம் ரூ. 7,745க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் முறையாக உயர்ந்தது. கிராம் 7,790 ரூபாய்க்கும், சவரன் 62,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 63 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 107க்கு விற்பனை செய்யப்படுகிறது.