சென்னை மண்ணடியில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் நின்ற தவெக வேட்பாளர் உள்ளிட்ட நான்கு பேரை திமுக வேட்பாளரும், முன்னாள் அறநிலையத் துறை அமைச்சருமான சேகர் பாபு தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய வடக்கு கடற்கரை காவல்துறையினர், சேகர் பாபு மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.