சென்னை, கிண்டி கத்திப்பாரா அருகே இன்று (ஏப்ரல் 8) ஒரு கார் தடுப்பு சுவர் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.