சென்னை ஹாடோஸ் சாலையில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது.