காஞ்சி: 2 லாரிகள் மோதி விபத்து ; பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் இருந்து, சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் வழியாக நேற்று காலை 8:00 மணி அளவில் காஞ்சிபுரம் நோக்கி அசோக் லேலாண்ட் லாரி சென்றது. கீரநல்லூர் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவாரச்சத்திரம் நோக்கி சென்ற எம்-சாண்ட் ஏற்றிய சென்ற லாரி, சாலையை கடக்க முயன்ற லாரி மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தால் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் மோதியதில், செண்டர் மீடியன் தடுப்பு சுவரில், சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி சிக்கியது. இந்த விபத்தில், இரு லாரி ஓட்டுநர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த, சுங்குவாரச்சத்திரம் போலீசார் வாகன விபத்தில் சிக்கிய லாரிகளை மீட்டனர். இந்த வாகன விபத்தால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி