வியாபார தேவைக்காக, சில மாதங்களுக்கு முன், சீனிவாசனிடம் 5, 000 ரூபாய் ராஜேந்திரன் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், மீன் கடைக்கு சென்ற சீனிவாசன், கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கடையில் மீன் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து, சீனிவாசனின் இடது பக்க தாடையில் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின்படி, ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து, மீன் வியாபாரி ராஜேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.