சென்னையில் கடந்த சில நாட்களாக மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 14) அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் (100.76 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியது. அதற்குப் பிறகு, மதுரை விமான நிலையம் (37.5 டிகிரி செல்சியஸ்), வேலூர் (37.4 டிகிரி செல்சியஸ்), தஞ்சாவூர் (37 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது.