சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தேனாம்பேட்டை மண்டல பணிகளுக்காக, ஆர். கே. சாலை, ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 10ம் தேதி காலை 10 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்துக்கொள்ளவும், அவசர தேவைகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீர் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.