சென்னையின் தரமணியில், செந்தில்குமார் (42) என்பவர் நேற்று (மே 25) தரமணி பேருந்து நிலையத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற ஒரு பெண்ணிடம் ஆபாச படத்தைப் பார்க்குமாறு கூறி, அவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டதால், பொதுமக்கள் செந்தில்குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.