திருமங்கலம், ஜெகதாம்பிகை தெருவைச் சேர்ந்த பால் வியாபாரி வாசுவின் இருசக்கர வாகனம் கடந்த 25ம் தேதி திருடப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த திருமங்கலம் போலீசார், அமைந்தகரையைச் சேர்ந்த கோகுல் மற்றும் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் அபிராமபுரம் பகுதியில் காவலாளி ஒருவரிடம் மொபைல் போன் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.