இளநிலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று. மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற விண்ணப்பப்பதிவில் 2, 49, 918 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதன்பின், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பம் செய்வதற்கான தேதியை இன்று (11. 06. 2024) வரை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள்
www. tneaonline. org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.