சென்னையில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை சமாளிக்க சென்னை மாநகராட்சி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை சார்பில், கோடை வெயிலின் பாதிப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், திறந்தவெளியில் பணிபுரிவோர், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.