போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கைது

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், இ.எஸ்.ஐ. திட்டம் அமல்படுத்துதல், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு தனி பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் (ஏஐடியுசி) கடந்த 3ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாக சென்று கோட்டையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் (ஏஐடியுசி) இணைந்து தமிழ்நாடு விற்பனையாளர் நல சங்கம், விடுதலை சிறுத்தைகள் பணியாளர் சங்கத்தினர் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி