சென்னை: உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத் திறப்பு விழா

9. 69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழகம்தான் இருக்கிறது என்று உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார். சென்னை தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது, 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழ்நாடுதான் இருக்கிறது. 

இந்த ஆண்டு தமிழ்நாட்டின் GSDP 36 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2030-இல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று ஒரு பெரிய இலக்குடன் தமிழ்நாடு பயணிப்பது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அந்த இலக்கை அடைவதில் உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. டெக்னாலஜி, கொள்கை உருவாக்கம் மற்றும் அறிவு சார்ந்த ஒரு பார்ட்னர்ஷிப் ஆகதான் இதை நான் பார்க்கிறேன். நீண்ட கால இலக்குகளை எட்டுவதில், ஒரு மாடல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க உலக வங்கியுடன் தமிழக அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும். நம்முடைய இந்தப் பயணம் புதுமை, சமூக பொருளாதார சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சி என்கிற இலக்கில் நிச்சயம் வெற்றியடையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி