இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி எண். 300ஏ-ன்படி தொழில் உரிமம் ஓராண்டு அல்லது 2 ஆண்டு அல்லது 3 ஆண்டு என தொழில் உரிமத்தினை அவரவர் விருப்பப்படி புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தி வணிகர்கள் தங்களது உரிமத்தை இணையதளம் வழியாகவும் (chennaicorporation.gov.in), இ-சேவை மையத்திலும், மண்டல அலுவலகங்களிலும் மற்றும் சம்பந்தப்பட்ட உரிமம் ஆய்வாளரிடம் கையடக்க கருவி மூலமாகவும் தொழில் உரிமத்தை மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25619305 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்