நீலாங்கரையைச் சேர்ந்த பச்சையப்பன்(45) மற்றும் கே.கே. நகரைச் சேர்ந்த வெற்றி(43) இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். பச்சையப்பனிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வெற்றி, ஆறு பேருடன் சேர்ந்து நீலாங்கரையில் அவரை காரில் கடத்திச் சென்றார். பூந்தமல்லியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து மிரட்டியபோது, பூந்தமல்லி போலீசார் பச்சையப்பனை மீட்டனர். அங்கிருந்த மூன்று பேரை கைது செய்தனர். வெற்றி உள்ளிட்ட மற்ற மூவரை தேடி வருகின்றனர்.