காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயது பார்த்திபன், சைதாப்பேட்டைக்குச் செல்லும்போது ராமாபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தார். அப்போது, ஜூஸின் அடியில் உயிருடன் இருந்த பூரானைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்காரர் உரிய பதில் அளிக்காததால், பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.