சவுக்கு சங்கர் தலைமறைவு குற்றவாளி: போலீசார் தகவல்

தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து சென்னை போலீஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ விசாரணை கோரியுள்ள இரு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை வரும் ஏப். 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி