சென்னை: பெரிய அளவில் பாதிப்பு இல்லை; முதலமைச்சர்

தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. மத்திய அரசு தமிழகத்துக்கு பேரிடர் நிதி கொடுக்க வேண்டியதை வலியுறுத்தி ஊடகங்கள் தொடர்ந்து எழுதினால் அதுவே மத்திய அரசுக்கு பெரிய அழுத்தமாக இருக்கும். 

மத்திய அரசு ஏற்கெனவே கொடுத்துள்ள நிதி போதுமானது அல்ல. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றுசேர்ந்து கடுமையாக எதிர்ப்போம். எங்களால் முடிந்தவரை அனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். மசோதாவுக்கு எதிராக இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தொடர்புடைய செய்தி