தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைமை பொதுமேலாளர் (பணியாளர் மேலாண்மை பிரிவு) நேற்று (செப் 29) வெளியிட்ட அறிவிப்பில், நபார்டு வங்கியில் 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். வயது வரம்பு 18 முதல் 30 வரை.
சம்பளம் ரூ. 35 ஆயிரம். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடையும். மாநில வாரியாக காலியிடங்கள், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களை www. nabard. org என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.