சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த சாய்ராம்(23) என்ற இளைஞர், தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவர், நாராயணபுரம் ஏரியின் கால்வாய் மீது அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவரது செல்போன் எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தது. செல்போனைத் தேடி ஏரியில் இறங்கிய சாய்ராம், நீரில் மூழ்கி மாயமானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மேடவாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், சாய்ராமைத் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.