சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் எம்.எஸ். விஸ்வநாதன் வசித்த டிமாண்டி சாலைக்கு, எம்.எஸ். விஸ்வநாதன் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், மறைந்த பிரபல பின்னணி பாடகர்களான திருச்சி லோகநாதன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் வசித்த மந்தைவெளி பகுதி சாலைகளுக்கும் அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு, முதல்வர் இன்று பெயர்ப் பலகைகளை திறந்து வைத்தார்.