அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எம்புரான்' படைத்திருக்கிறது. இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் படக்குழு அதற்காக 17 இடங்களில் காட்சிகள் நீக்கி மொத்தமாக 3 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து எடுத்தனர்.
நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்டியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.