ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகத்தர உணவு சேவை, சூழலியல் சுற்றுலா, உயர்தொழில்நுட்ப ஏஐ, ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை போன்ற பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 3 மாதங்கள். பயிற்சியின் போது சென்னையில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுச் செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி