சென்னை: சென்னையில் இன்று 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிக வெப்பம் காரணமாக அசௌகரியம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.