தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (நவம்பர் 11) விசாரணைக்கு வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.