சென்னை: மின்வெட்டை சரி செய்வது தொடர்பாக இதுவரை ஒரு ஆய்வுக் கூட்டம் கூட நடக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். மின்வெட்டு குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண் 2021லேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டதாகவும், புதிதாக உதவி எண் கொண்டு வந்ததுபோல் தவெக அமைச்சர்கள் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஹார்டு டிஸ்க்குகள் மாயம் என்பது மின்வெட்டு பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.