இந்த மனு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழில் நடத்தக் கோரி ஏற்கெனவே சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் தொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்குடன் இந்த வழக்கையும் நாளைக்கு சேர்த்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
20 ஆண்டுகளாக வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த தெர்மோமீட்டர் அகற்றம்