சென்னை வடபழனி முருகன் கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகள், ஆண்டவர் தெரு, அம்மன் கோவில் தெருக்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பக்தர்கள் அத்துமீறி நிறுத்துவதால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறுகலான மாட வீதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.