சென்னை: கட்டிபிடிக்கலாமா: மலையாள நடிகையிடம் அத்துமீறிய நபர் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகையிடம், ஊழியர் ஒருவர் கட்டிப்பிடிக்கலாமா என்று கேட்டு அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு ஆர்டர் செய்ய இன்டர்காம் வேலை செய்யாததால் புகார் அளிக்க சென்ற நடிகையிடம் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயந்துபோன நடிகை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஊழியரிடம் இனி இதுபோல் நடக்கக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். நடிகை புகார் அளிக்க விரும்பாமல் ஹோட்டலை காலி செய்து சென்றார்.

தொடர்புடைய செய்தி