திருவான்மியூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விக்னேஸ்வரனிடம், பணம் கேட்டு மிரட்டி, தாக்கி 1,000 ரூபாயை பறித்த ஜெயகுமார் என்பவரை திருவான்மியூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பெசன்ட் நகர் சர்ச் அருகே கடந்த 14ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. ஜெயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.