ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். உலகில் அனைவரும், அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.
பொருளாதாரத்திலும், கணிதத்திலும் பத்தும், பத்தும் நூறு என்றால், அன்பு செலுத்துவதில் பத்தும், பத்தும் பத்தாயிரம் ஆகும். எனவே, அனைவரும், அன்பு, உதவி, கருணை, சகோதரத்துவம், மகிழ்ச்சி, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை அனைவருக்கும் வாரி வழங்குவோம். அவை பல்கிப் பெருகி இந்த உலமே அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.