சென்னையில் 13இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், நேற்று இரவு அதிரடியாக 13 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இவர்களில் 12 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கு தாஹிரா, கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு லில்லி ஆகியோர் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.கே.பி. நகர், ஆர்.கே. நகர், ஐகோர்ட், கோட்டூர்புரம், அயனாவரம், நீலாங்கரை, ராஜமங்கலம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக ரோகிணி பொறுப்பேற்கிறார். இது தவிர, 14 போக்குவரத்து காவல் ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி