ராயபுரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்ணால் பரபரப்பு

ராயபுரம் தனியார் மஹாலில் நேற்று சையது இப்ராஹிம் என்ற வாலிபருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மணமகன் 8 வருடங்களாக தன்னுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்துவிட்டு, திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி