சென்னையில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாதவரம், செங்குன்றம் சாலை ஜே. கே. மஹால் அருகில் மற்றும் மாதவரத்தில் உள்ள குடிநீர் பகிர்மான நிலையத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக, நாளை (09.02.2026) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணி நேரம் திருவொற்றியூர் மற்றும் மாதவரம் குடிநீர் பகிர்மான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி